அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவின் 60-வது பிறந்த நாள் விழாவில், அவரின் நெருங்கிய நண்பர் இளவரசர் ஹாரி கலந்துகொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பாரக் ஒபாமா தன் 60வது பிறந்தநாளை கடந்த சனிக்கிழமை அன்று கொண்டாடியிருக்கிறார். ஆனால் அந்த பிரம்மாண்டமான விழாவில் ஒபாமாவின் நெருங்கிய நண்பர் இளவரசர் ஹாரி கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையில், அரச குடும்பத்தின் நிபுணர் Angela Levin, இளவரச சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில், ஒபாமா மற்றும் அவரின் மனைவி, இளவரசர் வில்லியமுக்கு தான் ஆதரவாக இருப்பார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், சகோதரர்களில் ஒருவருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றால், ஒபாமா தம்பதியர் வில்லியமிற்கு தான் ஆதரவளிப்பார்கள். பிரிட்டன் மகாராணி மேல் வைத்திருக்கும் மரியாதை காரணமாகவே அவர்கள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் ஒபாமா தம்பதி, இளவரசர் ஹாரியை உயர்வான இடத்தில் தான் வைத்திருக்கிறார்கள்.
எனினும் மேகன் பற்றி அவர்களுக்கு தெரியும் என்று கூறியிருக்கிறார். அவர்கள் மறுபடியும் ஹாரி-மேகனுடன் இணைந்து கொள்ளலாம் . என்றாலும் முன்பு இருந்த அந்த உறவு இனிமேல் இருக்காது என்று கூறியிருக்கிறார்.