மருத்துவ படிப்பில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் கருத்து தெரிவித்து வந்த நிலையில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்றத்தை நாடும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் நேற்று நடைபெற்ற வழக்கின் விசாரணையில் மத்திய அரசு 1 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் உயர்நீதிமன்றம் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தது.
இதற்கிடையில், திமுக, திக, மதிமுக உட்பட பலரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன . அந்த வழக்கையும் ஒவ்வொன்றாக சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சார்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் மத்திய அரசு ஒரு வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டு ஜூன் 22ஆம் தேதிக்கு வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் இது தொடர்பாக திமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினர் மனுவும் விசாரிக்க படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.