உடல் பருமன் கொண்டவர்கள் வீட்டு வேலைகளை செய்வதால் உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடையை குறைக்கலாம்.
- அரை மணி நேரம் துணிகளை துவைப்பது 133 கலோரிகளை எரிக்க உதவும். துணிகளை கைகளால் வைக்கும்பொழுது குறைக்கப்படும் கலோரியின் அளவு அதிகரிக்கும்.
- சோர்வு, அழுத்தம் போன்ற பிரச்சினைகள் நெருங்காமல் தன்னை காத்துக்கொள்ள தோட்ட வேலைகளை அரை மணி நேரம் செய்வதால் 167 கலோரிகளை குறைக்க முடியும்.
- ஒவ்வொரு முறையும் வீட்டை பெருக்கும் பொழுது 240 கலோரிகள் குறைக்கப்படும். எனவே அடிக்கடி வீட்டை பெருக்கி சுத்தம் செய்வது நல்லது.
- சமையல் வேலைகளில் அரை மணி நேரம் பெண்கள் ஈடுபடுவதால் 92 கலோரிகளை குறைத்து விடலாம்.
- அரைமணிநேரம் நாயுடன் விளையாடும்போது அல்லது நடைப்பயிற்சி செய்வதன் மூலமாகவும் 149 கலோரிகளை குறைக்க முடியும்.
- அரை மணி நேரம் காரை கழுவி சுத்தம் செய்வதாலும் 167 கலோரிகள் குறைக்கப்படும்.