Categories
உலக செய்திகள்

ஒபாமாவின் பிறந்தநாள் விழா…. புறக்கணிக்கப்பட்ட ராஜ குடும்பத்து தம்பதியினர்…. வெளியான தகவல்கள்….!!

ஒபாமாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இளவரசரான ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் பங்கேற்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா குடும்பத்திற்கும் பிரித்தானிய இளவரசர் ஹரிமேகன் தம்பதியினருக்கும் நீண்டகால நெருங்கிய தொடர்பு உண்டு. மேலும் ஒபாமா தம்பதியினர் ஹரி மேகன் தம்பதியினருக்கு வாழ்க்கை குறித்து ஆலோசனைகள்  கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில் ஒபாமா தனது 60வது பிறந்தநாளை கடந்த சனிக்கிழமை அன்று கோலாகலமாக கொண்டாடினார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் ஹரிமேகன் தம்பதியினர் பங்கேற்கவில்லை. அவர்கள் ஒருவேளை புறக்கணிக்கப்பட்டார்களா இல்லையெனில் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போனதா என்பது குறித்து தகவல்கள் வெளிவரவில்லை. ஆனால் இது குறித்து ராஜ குடும்பத்தின் நிபுணர் கூறுகையில் “ஒபாமா தம்பதியருடன் இருந்த நெருங்கிய உறவு முடிவுக்கு வந்துவிட்டதாக தெரிகிறது” என்று கூறியுள்ளார்.

மேலும் ஒபாமா தனது பிறந்த நாள் விழாவில் 500 பேரை அழைப்பதாக இருந்தது. ஆனால் உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விருந்தினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. அதில் ஹரியின் நண்பர் கெயில் கிங், ஜார்ஜ் க்ளூனி மற்றும் பாடகி பியான்ஸ் போன்ற 300 விருந்தினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர் என்று நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒருவர் தெரிவித்தார். இதற்கிடையில் ஹரிமேகன் தம்பதியினர் ஓபரா போட்டியின் போது ராஜ குடும்பத்தினரை அவமதிக்கும் விதமாக பேசியது ஒபாமாவுக்கு பிடிக்கவில்லை என்றும் ராஜ குடும்ப நிபுணரான  Camilla Tominey  தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதில் “ஒபாமா தம்பதியினர் உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். அவர்களின் பிள்ளைகள் இதே போல் தங்களை ஊடகங்களில் அவமதிக்கும் பேட்டி ஒன்றை அளிப்பதை விரும்பாதவர்கள்” என்று கூறியுள்ளார். அது மட்டுமின்றி ஒபாமாவின் மனைவி மிச்சேலும் ஹரிமேகன் குடும்ப பிரச்சனை குறித்து பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் “குடும்பத்தை விட முக்கியமானது வேறு எதுவும் இல்லை. தற்போது ஹரிமேகன் எப்படிப்பட்ட சூழலில் உள்ளனர் என்பது எனக்கு தெரியாது. ஆனால் அவர்கள் குடும்பத்துடன் சீக்கிரம் சேர நான் கடவுளை பிராத்திக்கிறேன்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |