Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அமித் ஷாவுடன் ஓபிஎஸ் – ஈபிஎஸ் சந்திப்பு …!!

சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஓபிஎஸ் – ஈபிஸ் சந்தித்துள்ளனர்.

இன்று சென்னை வந்து பல திட்டங்களை தொடங்கி வைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தற்போது அவர் தங்கும் லீலா பேலஸ் சென்றுள்ளார். அங்கு அரசியல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. மத்திய உள்துறை அமைச்சர் இங்கு வந்த அடுத்த சில நிமிடங்களில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம்,  இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இங்கு வந்துள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், ஓபிஎஸ் – இபிஎஸ் – அமைச்சர் ஜெயக்குமார் – மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தை  மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கூட்டமாகவே பார்க்க முடிகிறது. ஏனென்றால் பாஜகவுடன் இந்த தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும்,  இணைப்பாளரும் ஒருசேர அடுத்தடுத்து தெரிவித்திருக்கிறார்கள்.

ஆகையால் அந்த கூட்டணி எவ்வாறு அமையப்போகிறது ? பாஜக கேட்கக்கூடிய தொகுதிகளை அதிமுக எந்த அளவுக்கு தரப்போகிறது ? அல்லது பாஜக எந்தெந்த தொகுதிகள் கேட்கப் போகிறது ?என்பது தொடர்பான ஆலோசனையாக க கூட இருக்கலாம். இந்த ஆலோசனை முக்கியமாக இருக்கிறது. தேர்தல் களத்தை உருவாக்குவது அல்லது பிரச்சாரங்கள் அமைப்பதற்கு பேச வாய்ப்புள்ளது.

Categories

Tech |