Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் சொன்னது 1குழு…. 1இல்ல, 2இல்ல 6குழு அமைப்போம்…. இபிஎஸ் அதிரடி முடிவு …!!

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் ? என்று நாளை அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுகவில்  நாளை திட்டமிட்டபடி முதலமைச்சர் வேட்பாளர் யார் ? என்ற அறிவிப்பை வெளியிடப்படும் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள். ஏனென்றால் நாளை அறிவிக்காவிட்டால் பொதுமக்கள் மத்தியில் கட்சி மீதான நம்பகத்தன்மை கெட்டுவிடும் என்ற கருத்தும் எழுந்துள்ளது. இதனால் தான் நேற்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  ட்விட்டர் மூலம் தன்னுடைய கருத்தை தெளிவாக தெரிவித்திருந்தார் . அதில், தமிழக மக்கள், தொண்டர்களை நலன் சார்ந்தே எனது முடிவு இருக்கும். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது என்ற ஒரு விஷயத்தை மையப்படுத்திதான் அவருடைய கருத்து இருந்தது.

இந்நிலையில் நேற்று தமிழக முதலமைச்சர்கள், 18 அமைச்சர்கள் சென்னையில் ஆலோசனை நடத்தினர். அந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடியை அறிவிக்க வேண்டும் என்ற ஒரு முடிவினை எடுத்து இருக்கிறார்கள். ஓ.பன்னீர்செல்வத்தை பொருத்தவரை பார்த்தோமென்றால் 11 பேர் கொண்ட வழிகாட்டுதலில் குழுவை அமைக்க வேண்டும் என்று கருதுகிறார். அந்த குழுவை அமைத்தால் யாரை விடுவது ? என்று ஒரு குழப்பம் எழும் என்பதை மையப்படுத்தி  11பேர் கொண்ட குழு வேண்டாம் என்று முதல்வர் தரப்பு தெரிவித்து விட்டார்கள்.

11பேர் கொண்ட குழுவை அமைப்பதற்கு பதிலாக தேர்தல் பிரச்சாரக் குழு, தொகுதி பங்கீட்டுக்குழு,  விளம்பரகுழு என ஆறு குழுக்களை அமைக்க முதலமைச்சர் தலைமையாக கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட,  அந்த ஆறு குழுக்களிலும் பல்வேறு முக்கியமான நிர்வாகிகள் நியமனம் செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் ஓ பன்னீர்செல்வம் எது போன்ற நிலைப்பாட்டை எடுக்க போகிறார் ? என்ற ஒரு கேள்வி என்பது அதிமுக தொண்டர்கள் மத்தியில் இருக்கிறது. அதிமுகவின் அடுத்தடுத்த நகர்வு மூலம் இதற்க்கு விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |