அதிமுக கூட்டணி கட்சிகளின் முதல்வர் வேட்பாளர் யார் ? என்பதை பாஜக முடிவு செய்யும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
நேற்று அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றதில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே நேரடி விவாதம் நடைபெற்றுள்ளது. இறுதியாக வருகின்ற 7ஆம் தேதி முதல்வர் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர் கே.பி முனுசாமி தெரிவித்தார். இந்த கால இடைவெளியில் பல அர்த்தங்கள் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அண்ணா திமுக கட்சியின் கூட்டணி கட்சிகளின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை இருவரும் சேர்ந்து அறிவிப்பார்கள் என்று சொல்லியுள்ளார்.
பொதுவாக அண்ணா திமுகவை வரையிலே அதிக அதிகாரம் படைத்தது பொதுக்குழு தான். எப்போதுமே செயற்குழு – பொதுக்குழு இரண்டையுமே ஒரே நாளில் தான் வைப்பார்கள். செயற்குழுவில் உள்ள தீர்மானங்களை வடிவமைத்து விட்டு அதனை பொதுக்குழுவில் வைத்து ஒப்புதல் பெறுவார்கள், இதுதான் நடைமுறை வழக்கம். செயற்குழு மட்டும் இப்போது நடந்திருக்கிறது. முதல்வர் வேட்பாளர் குறித்து செயற்குழுவிலே முடிவு செய்து, இன்றே அறிவித்திருக்க வேண்டும். ஆனால் ஏன் இவ்வளவு காலதாமதம் என்பதிலே ஒரு சின்ன விடை இருக்கின்றது.
அண்ணா திமுக கூட்டணி கட்சிகளின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று ஒரு அடிக்கோடு போட்டு தான் கே.பி முனுசாமி பேசியதால் கூட்டணி கட்சிகளின் சம்மதத்தை பெற்று தான் அறிவிப்பார்கள் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். கூட்டணி கட்சிகள் என்று வந்தால் அண்ணா திமுகவில் பலம் பொருந்தி கட்சிகளில் ஒன்று பாரதிய ஜனதா.
எனவே பாரதிய ஜனதாவின் ஒப்புதலைப் பெறுவது அல்லது அங்கிருந்து ஏதேனும் ஒரு சமிக்கைகாக காத்திருக்கிறார்கள் என்று தான் புரிந்து கொள்ளப்படுகிறது. தற்காகத்தான் இந்த காலக்கெடு இருப்பதாக தெரிகின்றது. அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் ? என்று நேற்றே எல்லா முடிவையும் எடுத்து இருக்கலாம் செய்திருக்கலாம். அனைத்து தலைவர்களும் ஒன்றாகவே கூடியிருக்கிறார்கள்.
அண்ணா திமுகவின் செயற்குழுவில் தீர்மானத்தை நிறைவேற்றி அடுத்ததாக ஒரு பொதுக்குழுவைக் கூட்டி அதிலே ஒப்புதல் வாங்க வேண்டியதான். ஆனால் இதற்க்கு தனியாக ஒரு அறிவிப்பு செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது ? ஒரு கட்சி முதலமைச்சர் வேட்பாளர் கண்டிப்பாக இருக்க வேண்டும். மேலும் ஒரு கால அவகாசம் பெறுவதன் மூலமாக இன்னும் ஏதேனும் ஒரு அரசியல் பேச்சுவார்த்தை பாக்கி இருக்கிறது என்றுதான் நினைக்க தோணுகின்றதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.