அக்டோபர் 15 முதல் நாடு முழுவதும் பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து அதற்கான விதிமுறைகள் குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு நடவடிக்கை தற்போது வரை தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தளர்வுகளின் அடிப்படையில், மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பல செயல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், பள்ளி , கல்லூரி உள்ளிட்ட கல்வி வளாகங்கள் திறப்பது குறித்து தொடர்ந்து ஆலோசிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நாடு முழுவதும், அக்டோபர் 15-ஆம் தேதி முதல் 10, 11, 12ஆம் வகுப்புகளை தொடங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், தனிமனித இடைவெளி, ஆரோக்கியம், உடல் நலன் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும். பெற்றோரின் எழுத்துப்பூர்வமான ஒப்புதலுடன் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டும். மாணவர்களுக்கு வருகை பதிவேடு கட்டாயமில்லை. ஆன்லைன் வழியாகவும் வகுப்புகளில் பங்கேற்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.