Categories
மாநில செய்திகள்

மக்களே முக்கிய செய்தி : OCT 1 முதல் 15-ம் தேதிக்குள் கட்டாயம்….. அதிரடி அறிவிப்பு….!!

அக்டோபர் 15-ம் தேதிக்குள் சொத்து வரியை முறையாக செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்த காரணத்தினால், தமிழக அரசு மக்களுக்கு சொத்துவரி உள்ளிட்டவைகளை கட்டுவதற்கு கால அவகாசம் அளித்தது. இந்நிலையில்,

சொத்து வரியை சரியான காலத்திற்குள் செலுத்தத் தவறும் பட்சத்தில், ஆண்டிற்கு இரண்டு சதவீதம் தண்டனைத் தொகை செலுத்த நேரிடும் என சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அரையாண்டு சொத்து வரியை அக்டோபர் 1 முதல் 15 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். சொத்துவரி உரிய காலத்தில் செலுத்தினால், 5% ஊக்க தொகையைப் பெறலாம் எனவும் கூறியுள்ளார்.

Categories

Tech |