தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பு குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த தமிழகத்திலும் ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பல விஷயங்களுக்கு தளர்வுகளின் அடிப்படையில்,
அனுமதி அளிக்கப்பட்ட போதிலும், பெரும்பாலானோர் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்ற ஏக்கத்திலேயே இருந்து வந்தனர். இந்நிலையில், நாடு முழுவதும் அக்டோபர் 15ம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் தியேட்டர்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இதையடுத்து,
டெல்லி, உத்திரப்பிரதேசம், மேற்கு வங்கம், பீகார் உட்பட பல மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் அக்டோபர் 22ஆம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும், அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.