Categories
சென்னை மாநில செய்திகள்

மக்களே அலெர்ட் : “OCT-NOV” 2 மாசம் ரொம்ப மோசமா இருக்கும்….. மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை….!!

கொரோனா  பாதிப்பைக் கட்டுப்படுத்த இனி நடவடிக்கை மிகக் கடுமையாக இருக்கும் என சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்திலும் இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டதையடுத்து  நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டிருப்பதை நாம் அறிவோம்.

இந்நிலையில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் கொரோனா பாதிப்பு  மிகவும் ஆபத்தானவையாக இருக்கும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் 100 பேருக்கு கொரோனா  பரிசோதனை செய்தால் அதில் 10 பேருக்கு கட்டாயம் தொற்று  உறுதியாகும் நிலை  தற்போது உள்ளதாகவும், மக்கள் வெளியே செல்லும்போது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். இனிமேல் பாதிப்பை  கட்டுப்படுத்த  மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மிகவும் கடுமையாக இருக்கும் என எச்சரித்துள்ளார். 

Categories

Tech |