Categories
தேசிய செய்திகள்

வங்கி கடன் இருக்கிறதா…? OCT-5 ஆம் தேதிக்குள்…. உச்ச நீதிமன்றம் உத்தரவு….!!

கடன் பெற்றவர்கள் மாதத் தவணை செலுத்துவது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்த காரணத்தினால், வங்கியில் கடன் பெற்றவர்கள், இஎம்ஐ கட்டுபவர்கள் ஆகியோர் மாதத்தவணை செலுத்துவதற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டது. 

இந்நிலையில் வங்கி கடன் பெற்றவர்களுக்கு, பொருளாதார சுமையை குறைக்கும் திட்டத்தை ஒரு வாரத்திற்குள் மத்திய அரசு சமர்ப்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாதத்தவணை வழங்கும் சலுகை காலத்தை நீட்டிக்க வேண்டி பொது மக்கள் எதிர்பார்க்கும் நிலையில், அக்டோபர் 5 ஆம் தேதிக்குள் மத்திய அரசு இதற்கு முடிவை எட்ட வேண்டும் என  வலியுறுத்தியுள்ளது. 

Categories

Tech |