Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று அக்டோபர் 22…!!

இன்றைய தினம் : 2019 அக்டோபர் 222

கிரிகோரியன் ஆண்டு : 295_ஆம் நாளாகும்.

நெட்டாண்டு : 296_ஆம் நாள்

ஆண்டு முடிவிற்கு  : 70 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள் : 

 

362 – அந்தியோக்கியா அருகில் அமைந்திருந்த அப்போலோவின் ஆலயம் தீக்கிரையானது.

794 – பேரரசர் கன்மு சப்பானியத் தலைநகரை எய்யன்கியோவுக்கு (தற்போது கியோத்தோ) மாற்றினார்.

1383 – போர்த்துக்கல் மன்னன் முதலாம் பேர்டினண்டு ஆண் வாரிசு அற்ற நிலையில் இறந்ததை அடுத்து நாட்டில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.

1633 – டச்சு கிழக்கிந்தியக் கம்பனியுடன் மிங் படை சீனாவின் தெற்கு பூஜியன் கடலில் போரில் ஈடுபட்டு பெரும் வெற்றி பெற்றது.

1707 – சில்லி கடற்படைப் பேரழிவு: பிரித்தானியாவின் நான்கு அரச கடற்படை கப்பல்கள் கடல்வழிநடத்துதலின் தவறால் சில்லி தீவுகளில் மூழ்கியதில் ஆயிரக்கணக்கான கடற்படையினர் உயிரிழந்தனர். இதன் காரணமாக முதலாவது நெடுங்கோட்டுச் சட்டம் 1714 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

1784 – உருசியா அலாஸ்காவில் கோடியாக் தீவில் குடியேற்றத்தை அமைத்தது.

1797 – பதிவு செய்யப்பட்ட முதலாவது வான்குடைப் பாய்ச்சல் அந்திரே-சாக் கர்னெரின் என்பவரால் பாரிசு நகருக்கு 3200 அடி மேலாக நிகழ்த்தப்பட்டது.

1844 – பாரிய எதிர்பார்ப்பு: வில்லியம் மில்லரின் படிப்பினைகளைப் பின்பற்றிய மில்லரிய கிறித்தவர்கள் இயேசுவின் இரண்டாம் வருகையும் உலக முடிவையும் எதிர்பார்த்திருந்தனர். அடுத்த நாள் பெரும் ஏமாற்ற நாளாக அறிவிக்கப்பட்டது.

1859 – எசுப்பானியா மொரோக்கோ மீது போர் தொடுத்தது.

1877 – இசுக்காட்லாந்தில் இடம்பெற்ற பிளான்டையர் சுரங்க விபத்தில், 207 சுரங்கத் தொழிலாளர்கள் இறந்தனர்.

1878 – செயற்கை ஒளிக்கு கீழ் முதலாவது ரக்பி போட்டி இங்கிலாந்தின் சால்போட் நகரில் நடைபெற்றது.

1879 – தாமசு ஆல்வா எடிசன் தனது முதலாவது தொழில் ரீதியான மின் வெள்ளொளிர் விளக்கைப் பரிசோதித்தார். இது 13½ மணி நேரம் எரிந்தது.

1927 – நிக்கோலா தெஸ்லா ஒரு முனை மின்சாரம் உட்பட 6 புதிய கண்டுபிடிப்புகளை அறிவித்தார்.

1941 – இரண்டாம் உலகப் போர்: பிரெஞ்சு எதிர்ப்புக் குழுவின் உறுப்பினர் கை மோக்கே மற்றும் 29 பணயக்கைதிகள் நாட்சி செருமனிப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1943 – இரண்டாம் உலகப் போர்: செருமனி மீது பிரித்தானிய அரச வான்படையினரின் இரண்டாவது நெருப்புப்புயல் தாக்குதலின் போது, காசெல் நகரில் 10,000 பேர் கொல்லப்பட்டனர், 150,000 பேர் வீடுகளை இழந்தனர்.

1947 – காஷ்மீர் பிரச்சினை தொடங்கியது.

1957 – வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்காவின் முதல் போர்ச் சாவு இடம்பெற்றது.

1962 – கியூபா ஏவுகணை நெருக்கடி: கியூபாவில் சோவியத் அணுக்கரு ஆயுதங்கள் இருப்பதைத் தமது விமானப் படையினர் கண்டறித்துள்ளதாக அமெரிக்கத் தலைவர் ஜான் எஃப். கென்னடி அறிவித்தார்.

1964 – பல்கட்சிக் குழு கனடாவின் கொடிக்கான வடிவமைப்பை முடிவு செய்தது.

1964 – பிரெஞ்சு எழுத்தாளர் இழான் பவுல் சார்த்ரவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு  அறிவிக்கப்பட்டது, எனினும் அவர் அதனைப் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார்.

1965 – இந்தியா-பாக்கித்தான் இடையான இரண்டாம் காஷ்மீர் போர் முடிவுக்கு வந்தது.

1966 – சோவியத் ஒன்றியம் லூனா 12 விண்கலத்தை சந்திரனை நோக்கி ஏவியது.

1968 – நாசாவின் அப்பல்லோ 7 விண்கலம் பூமியை 163 தடவைகள் சுற்றிய பின்னர் அட்லாண்டிக் கடலில் பாதுகாப்பாக இறங்கியது.

1970 – துங்கு அப்துல் ரகுமான் மலேசியாவின் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

1972 – வியட்நாம் போர்: ஓ சி மின் நகரில் என்றி கிசிஞ்சரும் தென் வியட்நாமியத் தலைவர் நியூவென் வான் தீயுவும் போர் நிறுத்தம் தொடர்பாக சந்தித்து உரையாடினர்.

1975 – சோவியத்தின் ஆளில்லா விண்கலம் வெனேரா 9 வெள்ளிக் கோள் மீது தரையிறங்கியது.

1978 – இரண்டாம் அருள் சின்னப்பர் திருத்தந்தையாக பதவியேற்றார்.

1987 – ஈழப்போர்: யாழ்ப்பாணம் அராலித் துறையில் இந்திய அமைதிப் படையின்  உலங்குவானூர்தி தாக்கியதில் பல பயணிகள் கொல்லப்பட்டனர்.

1999 – இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் பிரான்சில் பணியாற்றிய மோரிசு பேப்போன் என்ற இராணுவ அதிகாரிக்கு மானுடத்துக்கு எதிரான குற்றங்களுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது..

2001 – பிஎஸ்எல்வி சி-மூன்று விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

2007 – எல்லாளன் நடவடிக்கை: இலங்கையின் அனுராதபுரம் இலங்கை வான்படைத் தளம் மீது விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் நடத்திய தாக்குதலில் கரும்புலிகள் 20 பேரும், இலங்கை படையினர் 14 பேரும் கொல்லப்பட்டு பல வானூர்திகள் அழிக்கப்பட்டன.

2008 – இந்தியா சந்திரனை நோக்கிய சந்திரயான்-1 என்ற முதலாவது ஆளில்லா விண்கலத்தை ஏவியது.

2013 – ஆத்திரேலியத் தலைநகர ஆட்புலம் ஒருபால் திருமணத்தை அங்கீகரித்தது.

இன்றைய தின பிறப்புகள் : 

1511 – எராசுமசு இரீன்கோல்டு, செருமானிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1553)

1811 – பிரான்சு லிசித்து, அங்கேரிய இசைக்கலைஞர் (இ. 1886)

1844 – சாரா பேர்ண்ஹார்ட், பிரான்சிய நடிகை (இ. 1923)

1870 – செ. இராசநாயகம், ஈழத்து வரலாற்றாளர், எழுத்தாளர் (இ. 1940)

1881 – கிளிண்டன் ஜோசப் டேவிசன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1958)

1887 – ஜான் ரீட், அமெரிக்க ஊடகவியலாளர், கவிஞர் (இ. 1920)

1900 – அஷ்பகுல்லா கான், இந்திய விடுதலைப் போராளி (இ. 1927)

1902 – டபிள்யூ. தகநாயக்க, இலங்கைப் பிரதமர், அரசியல்வாதி (இ. 1997)

1905 – கார்ல் குதே யான்சுகி, அமெரிக்க இயற்பியலாளர், கதிர்வீச்சுப் பொறியியலாளர் (இ. 1950)

1907 – எஸ். டீ. சௌலா, இந்திய-அமெரிக்கக் கணிதவியலாளர் (பி. 1995)

1919 – எச். வேங்கடராமன், தமிழகத் தமிழறிஞர், பதிப்பாளர் (இ. 1991)

1919 – டோரிஸ் லெசிங், நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய எழுத்தாளர் (இ. 2013)

1922 – அ. துரையரசன், தமிழக அரசியல்வாதி (இ. 1988)

1936 – நிவ்விலி அலெக்சாண்டர், தென்னாப்பிரிக்க விடுதலைப் போராட்ட வீரர்

1938 – கா. இந்திரபாலா, இலங்கை வரலாற்றாளர், கல்வியாளர்

1946 – தீபக் சோப்ரா, இந்திய-அமெரிக்க மருத்துவர், எழுத்தாளர்

1967 – கார்லோசு மென்சியா, ஒந்துராசு-அமெரிக்க நடிகர்

1988 – பரினீதி சோப்ரா, இந்திய நடிகை

இன்றைய தின இறப்புகள் : 

1864 – மிரோன் வின்சுலோ, தமிழ் ஆங்கில விரிவான அகராதியைத் தொகுத்த அமெரிக்க மதப்பரப்புனர் (பி. 1789)

1906 – பால் செசான், பிரான்சிய ஓவியர் (பி. 1839)

1918 – திமித்ரி துபியாகோ, உருசிய வானியலாளர் (பி. 1849)

1925 – அ. மாதவையா, தமிழக புதின எழுத்தாளர், பத்திரிகையாசிரியர் (பி.1872)

1964 – கவாஜா நசிமுத்தீன், பாக்கித்தானின் 2வது பிரதமர் (பி. 1894)

1975 – அர்னால்ட் ஜோசப் டாயின்பீ, பிரித்தானிய நூலாசிரியர், வரலாற்றாசிரியர் (பி. 1889)

1986 – ஆல்பர்ட் செண்ட்-ஜியார்ஜி, நோபல் பரிசு பெற்ற அங்கேரிய-அமெரிக்க மருத்துவர் (பி. 1893)

1990 – லூயி அல்தூசர், அல்சீரிய-பிரான்சிய மெய்யியலாளர் (பி. 1918)

2011 – சொ. கருப்பசாமி, தமிழக அரசியல்வாதி, முன்னாள் அமைச்சர் (பி. 1955)

இன்றைய தின சிறப்புநாள் : 

இரண்டாம் அருள் சின்னப்பர் விழா

Categories

Tech |