அக்டோபர் 30-ஆம் தேதி மிலாதுநபி பண்டிகை கொண்டாட்டபட இருப்பதை முன்னிட்டு காஞ்சிபுரம் , செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில், மாவட்ட ஆட்சியர் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் அக்டோபர் 30-ஆம் தேதி அனைத்து மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளார்.
30ஆம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகளும், அத்துடன் இணைந்த மதுக்கடைகளை மூடவேண்டும். உத்தரவை மீறி மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.இதனால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்