லண்டனில் மர்ம கும்பல் இளைஞனை பூங்காவில் வைத்து ஓட ஓட விரட்டி கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து நாட்டினுடைய தலைநகரமான லண்டனில் மிகவும் பிரபலமான Hyde என்ற பூங்கா அமைந்துள்ளது. இந்நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட காரணத்தினால் பொதுமக்கள் பூங்காவில் கூடியிருந்தனர். இந்த சூழலில் பூங்காவில் வைத்து 17 வயது இளைஞனை மர்ம கும்பல் கத்தியால் குத்துவதற்கு துரத்தியுள்ளது. அப்போது அந்த இளைஞரும் மர்ம கும்பலுடன் கத்தியை வைத்து கொண்டு சண்டை போட்டுள்ளார். அதன்பின் சண்டை போட முடியாத பட்சத்தில் இளைஞன் அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக ஓடும்போது, அந்த மர்ம கும்பல் அவனை கத்தியால் ஓட ஓட விரட்டி குத்தியுள்ளனர். இதனை அக்கூட்டத்திலிருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். மேலும் இந்த கத்திக்குத்து சம்பவம் பூங்காவில் நடக்கும்போது அங்கிருந்த பொதுமக்கள் தங்களுடைய உயிரை காப்பாற்றிக்கொள்ள தலைதெறிக்க ஓடியுள்ளனர்.
அதன் பின் அக்கூட்டத்திலிருந்த ஒருவர் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த தகவலின்படி பூங்காவிற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்த இளைஞரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்யும் காவல்துறை அதிகாரியான Alex Bingley கூறியதாவது, பொதுமக்கள் கூடும் இடத்தில் இளைஞனுக்கு கத்தி குத்து நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இனி வரும் காலங்களில் பூங்காவில் காவல் துறை அதிகாரி பாதுகாப்பிற்கு இருப்பார் என்று கூறியுள்ளார். இதனையடுத்து அந்த மர்ம கும்பலை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.