நீண்ட காலமாக வெளியிடப்படாமல் இருந்த இயக்குனர் வசந்தின் திரைப்படமானது ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் 1990 ஆம் ஆண்டில் வெளியான கேளடி கண்மணி என்ற திரைபடத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குனர் வசந்த். இதனை அடுத்து ஆசை, நேருக்கு நேர், பூவெல்லாம் கேட்டுப்பார், மூன்று பேர் மூன்று காதல், சத்தம் போடாதே போன்ற வெற்றிப் படங்களையும் தந்துள்ளார். இதனை தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்பு ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ என்ற அந்தலாஜி திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் பார்வதி, லக்ஷ்மிகுமார் சந்திரமௌலி, சுந்தர் ராமு கருணாகரன் போன்றோர் நடித்துள்ளனர். இந்த படமானது ஆதவன், ஜெயமோகன் அசோகமித்திரன், போன்றோரின் சிறுகதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இது சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டு பாராட்டையும் புகழையும் பெற்றுது. இந்த நிலையில் படமானது திரையரங்கில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்த்த நிலையில் சோனி ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. மேலும் தற்போது மணிரத்னம் தயாரிப்பில் உருவாகி வரும் நவராசா என்னும் அந்தலாஜி திரைப்படத்தில் ‘பாயாசம்’ என்ற பகுதியை இயக்கியுள்ளார். அதில் டெல்லி கணேஷ், அதிதி பாலன், ரோகிணி போன்ற முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.