ஓடிடி செய்தி வெப்சைட்டுகளுக்கு மத்திய அரசு சில விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது.
ஓடிடி தளங்கள் மற்றும் செய்தி வலை தளங்களின் மீது முக்கிய விதிகளை விதித்து ஒழுங்கு முறைப்படுத்த இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் உட்பட்ட 40 ஓட்டிட்டு தளங்களுக்கும், நூற்றுக்கணக்கான செய்தி வலை தளங்களில் இயங்கி வருகின்றன. டிஜிட்டலில் ஊடகங்களில் காக்கப்பட வேண்டிய கட்டுப்பாடு தற்போது வெகுவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டிஜிட்டல் மற்றும் ஓடிடி தளங்களுக்கு வரையறுக்கப்பட்ட விதிமுறைகளை மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என தகவல் மற்றும் தொழில் நுட்பத்தை சேர்ந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அச்சு ஊடகங்களுக்கு பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா அமைப்பைப் போல, திரைப்படங்களுக்கு தணிக்கை துறை போல, டிஜிட்டல் மீடியக்கு ஒரு கண்காணிப்புத்துறை அறிவிக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. ஓடிடி தளங்களின் சந்தை இந்தியாவைப் பொருத்தவரை 20 கோடி பயனாளர்களைக் கொண்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறை போட்டி தளங்களில் வரும் உள்ளடக்கத்தை குறித்தும், அதில் வரும் 18+ புகார்கள் குறித்தும் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் தெரிவிக்கப்படும்.
மேலும் ஆஸ்திரேலியாவில் கடைபிடிக்கப்படுவதை போல, உள்ளூர் செய்திகளுக்கு கூகுள் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்களிடம் கட்டண விதிப்பு குறித்தும் மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.