ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் தென் மண்டல செயலாளர் சுகுமாரன் தலைமையில் நடைபெற்றது. இதனையடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் காசிவிஸ்வநாதன் போராட்டத்தில் பேசினார். அதில் பீமா கோரேகான் சதி வழக்கில் சிறைப்படுத்தப்பட்டுள்ள 15 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் எனவும், கருத்துரிமைக்கு எதிரான உபா சட்டத்தை உடனே திரும்பப் பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து தேசிய புலனாய்வு முகமை அளிக்கப்பட்டுள்ள வரம்பற்ற அதிகாரத்தை திரும்பப்பெற வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒடுக்கப்பட்டோர் வாவுரிமை இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாவட்டத் தலைவர் முத்துகிருஷ்ணன், மாநில செயலாளர் தினிஷ், செயலாளர் சுரேஷ், இந்திய கம்யுனிஸ்டு கட்சியின் மாநகர செயலாளர் நல்லதம்பி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாலன் மற்றும் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் துர்க்கைமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.