Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திடீரென பற்றி எறிந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்…. தீயணைப்பு துறையினரின் முயற்சி….!!

சாலையில் ஓடும் கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராஜகோபாலபுரம் பகுதியில் வெள்ளத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் தியாகராஜநகர் 4 வழி சாலை பாலத்தை கடந்து காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது குத்துக்கல் கிராமம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த போது கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வெள்ளத்துரை உடனடியாக காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கி ஓடி உயிர் தப்பினார்.

இதுகுறித்து வெள்ளத்துரை பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புதுறையினர் காரில் தண்ணீரை பீச்சி அடித்து தீயை முற்றிலும் அணைத்தனர். ஆனால் கார் முற்றிலும் சேதமடைந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பாளையங்கோட்டை காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |