ஓடும் கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள கருமந்துறையில் தீர்த்தன், ஆண்டி இருவரும் வசித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் ஒரே காரில் கருமந்துறையில் இருந்து ஆத்தூருக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் கார் பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் வந்த போது திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதனால் காரில் இருந்த 2 பேரும் உடனே வெளியே வந்ததால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் காரில் ஏற்பட்ட தீயை தண்ணீர் ஊற்றி அணைக்க முயற்சி செய்தனர். எனினும் கார் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.