ஓடும் பேருந்தில் பெண் ஊழியரிடம் நகையை திருடியவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை பகுதியில் சுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அங்கமாள் என்ற மகள் உள்ளார். இவர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அங்கம்மாள் வேலைக்கு செல்வதற்காக மணிக்கூண்டில் இருந்து ஒரு தனியார் பேருந்தில் கொக்கிரகுளத்திற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. இந்நிலையில் அங்கம்மாள் கொக்கிரக்குளம் பேருந்து நிலையத்தில் இறங்கியபோது தனது கழுத்தை அவர் பார்த்துள்ளார்.
அப்போது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலி காணாமல் போனது கண்டு அங்கம்மாள் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் மர்ம நபர் பேருந்தில் இருந்த கூட்ட நெரிசலில் அவரது நகையை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அங்கம்மாள் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.