Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஓடும் ரயில் மீது கல் விச்சு…. மர்ம நபர்களின் செயல்…. ரயில்வே போலீஸ் விசாரணை….!!

ரயிலின் மீது மர்ம நபர்கள் கல் வீசிய சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கோரக்பூரில் இருந்து திருவனந்தபுரத்தை நோக்கி ரப்தி சாகர் விரைவு எக்ஸ்பிரஸ் ரயில் ஜோலார்பேட்டை வழியாக சென்று கொண்டிருக்கும் போது வலையாம்பட்டு ரயில்வே மேம்பாலம் அருகில் சென்று நிலையில் ரயில் மீது மர்ம நபர்கள் சரமாரியாக கல்வீசி உள்ளனர். இதனால் ரயில் பெட்டியின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்துள்ளது. இது பற்றி எஞ்சின் ஓட்டுனர் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் பெருமாள் தலைமையிலான காவல்துறையினர் சார்லி என்ற மோப்ப நாய் உதவியுடன் தண்டவாளத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது காவல்துறையினர் மற்றும் தண்டவாளத்தின் அருகில் வசிக்கின்ற மக்களை அழைத்து தண்டவாளம் அருகே சிறுவர்கள் யாரும் விளையாடக் கூடாது எனவும், ஆடு மற்றும் மாடுகளை மேய்ச்சலுக்கு விடக்கூடாது எனவும், பொக்லைன் எந்திரம் மூலம் ஏதேனும் பணிகளை மேற்கொள்ள கூடாது எனவும் மீறினால் கடுமையான நடவடிக்கை எடுப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |