ஊரக உள்ளாட்சி தேர்தலில் முறைகேட்டிற்கு அதிகாரிகள் துணை புரிகிறார்கள் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றியை தடுக்க அதிமுக முறைகேடுகளை செய்து வருகின்றது என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் மாநில தேர்தல் ஆணையரை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சி , அதிகாரிகள் , காவல்துறை வாக்கு எண்ணிக்கை முறைகேட்டிற்கு துணை புரிவதாக கேள்வி எழுப்பினர்.இதற்க்கு பதிலளித்த திமுக தலைவர் முக.ஸ்டாலின் நிச்சயமாக , சத்தியமாக , உறுதியாக அண்ணா மீது ஆணையாக அதிகாரிகள் உறுதுணையாக நடக்கிறார்கள் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.