வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடத்தி வந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில், அரியானா மற்றும் பஞ்சாப் விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, குடியரசு தினத்தன்று டெல்லிக்குள் டிராக்டர் பேரணியை நடத்துவதாக விவசாயிகள் சங்கம் அறிவித்தது. அதன்படி நடத்தப்பட்ட இந்த பேரணியில் எதிர்பாராதவிதமாக வன்முறை வெடித்தது. காவல்துறைக்கும், போராட்டகாரர்களுக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டது. ஒரு விவசாயி விபத்தில் உயிரிழந்தார். ஆனால், வன்முறை சம்பவங்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என விவசாய சங்கங்கள் மறுத்தன.
இதையடுத்து இணையம் துண்டிப்பு, 144 தடை உத்தரவு என அடுத்தடுத்த நடவடிக்கைகள் மூலம் போராட்டத்தை காவல்துறையினர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடத்தி வந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.