Categories
தேசிய செய்திகள்

நடைமேடை டிக்கெட்டுகளின் விலை அதிகரிப்பு…. டெல்லியில் ரயில்வே அதிரடி அறிவிப்பு…!!!

டெல்லி ரயில்வே நிலையத்தில் நடைமேடை டிக்கெட்டின் விலை உயர்த்தப்பட்டுள்ள சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள ரயில் நிலையங்களில் தேவையற்ற கூட்டத்தை குறைப்பதற்காக நடைமேடை டிக்கெட் விலையை உயர்த்துவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. டெல்லியில் தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கூட்டமாக வருவதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற முடிவை வடக்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது: டெல்லி மண்டலத்தில் உள்ள 8 ரயில் நிலையங்களிலும் மீண்டும் ரயில் நடைமேடை டிக்கெட் கொடுக்கும் பணி தொடங்கப்பட்டு வருகின்றது. தேவையற்ற கூட்டத்தை குறைக்கும் விதமாக டிக்கெட்டின் விலை 30 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளது.

Categories

Tech |