சத்தீஸ்கர் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 23 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 10 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக பேசிய சத்தீஸ்கர் மாநில சுகாதாரத்துறை அமைச்சர், ” கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், இன்று யாருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை என தெரிவித்தார். சத்தீஸ்கர் மாநிலத்தில் இதுவரை தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆக உள்ளது.
அதில் தற்போது, 23 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 10 பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது” என தெரிவித்தார். அதேபோல, அம்மாநிலத்தில் இதுவரை ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். இன்று காலை கிடைத்த தகவலின் படி, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,380 ஆக உயர்ந்துள்ளது.
அதில், 10,477 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1489 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும் இறப்புகள் எண்ணிக்கை 414 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 3081 பேரும், தமிழ்நாட்டில் 1,267 பேரும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.