Categories
தேசிய செய்திகள்

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 651 பேரில் 15 பேரை கண்டுபிடிக்கமுடியவில்லை: பஞ்சாப் முதல்வர் பேட்டி

பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு மே மாதம் 1ம் தேதி வரை நீடிக்கப்படுவதாக அம்மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது.

செய்தியாளர்களை சந்தித்த அவர், டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட 651 பேரில் 636 கண்டறியப்பட்டு அவர்களுக்கு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் 15 பேரை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவித்தார். அதேபோல, 28 மில்லியன் மக்களை தொகை இருக்கும் நாட்டில் இதுவரை அறிகுறி இருந்த 2877 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன என அவர் கூறினார்.

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மார்ச் 25ம் தேதி பிறப்பிக்கப்பட்டு இன்று 17வது நாளாக அமலில் உள்ளது. 21 நாட்களுக்கு நீடிக்கும் இந்த உத்தரவு ஏப்.14ம் தேதியோடு முடிவடைகிறது. ஆனால் நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருப்பதால் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு மாநிலங்கள் சார்பில் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த நிலையில், ஏப்ரல் 11ம் தேதி காணொலி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார். அதேபோல, நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஊரடங்கை நீட்டிப்பது அவசியம் என்று கூறினார். அதேபோல, ஊரடங்கு உத்தரவை மேலும் 14 நாட்களுக்கு நீடிக்க வேண்டும் என மருத்துவர் குழு அரசுக்கு பரிந்துரை செய்தது.

அதனை தொடர்ந்து தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது. ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக விவாதிக்க உள்ளது. இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் மே 1ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பஞ்சாபில் மட்டும் இதுவரை 132 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 11 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |