வழக்கத்தைவிட ஜனவரி மாதம் உடற்பயிற்சிக் கூடங்களில் செய்பவர்களின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக ஜிம்முக்கு அனுமதியில்லை என்று அரசு தடை விதித்திருந்தது. இதனால் பல மாதங்களாக ஜிம் மூடப்பட்டிருந்தது. உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள், ஆணழகன் போட்டியில் கலந்து கொள்பவர்கள் போன்றோர் ஜிம் திறக்காத நிலையில் அவதிப்பட்டு வந்தனர்.
இந்த வருடம் ஜனவரி மாதம் உடற்பயிற்சி கூடங்களில் செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை ஒரு ஆங்கில ஊடகம் ஒன்று தனது கட்டுரையில் வெளியிட்டுள்ளது. அதில் ஊரடங்கு காலகட்டத்தில் மக்களிடையே உடல் நலம் தொடர்பான அக்கறை 50 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.