Categories
உலக செய்திகள்

எரிமலையின் குறுக்கே கட்டப்பட்ட கயிறு… சீற்றத்தின் நடுவே கடந்து சென்று சாதனை படைத்த நபர்!

நிகரகுவாவில் எரிமலையின் குறுக்கே உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் (tightrope) மீது நடந்து சென்று, அமெரிக்க வீரர் ஒருவர் சாதனை நிகழ்த்தியுள்ளார்.

மத்திய அமெரிக்க நாடான நிகரகுவாவின் (NICARAGUA) மசாயா என்ற ((MASAYA)) பகுதியில் இருக்கிறது அந்த எரிமலை. சீற்றத்துடன் காணப்படும் அந்த எரிமலையின் குறுக்கே உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது அமெரிக்க வீரர் நிக் வாலன்டா (Nik Wallenda ) என்பவர் ஆக்சிஜன் முகமூடி உள்ளிட்ட உபகரணங்களை அணிந்தபடியே நடந்து சென்றார்.

Image

இந்த சாகசத்தின்போது அவர் தனக்கு பிடித்த பாடல்களை பாடிக்கொண்டும், தந்தையிடம் பேசியபடியும் நடந்தார். இந்த சாகசம் இரவு நேரத்தில் மேற்கொள்ளப்பட்டது. அதேநேரம் அமெரிக்க தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

Image

இவர் வெற்றிகரமாக கடந்ததும் அங்கு சுற்றியிருந்தவர்கள் கை தட்டி அவரை பாராட்டினர். இது அவருக்கு முதல் சாதனையல்ல. ஆம், ஏற்கெனவே நயாகரா நீர்வீழ்ச்சி மற்றும் டைம்ஸ் சதுக்கம் ஆகியவற்றை வாலன்டா கடந்து சென்றுள்ளது நினைவுகூரத்தக்கது .

Image

Categories

Tech |