பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்த கல்லூரி அலுவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி பகுதியில் இளையராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் அலுவலக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இளையராஜா பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து மன உளைச்சலில் இருந்த இளையராஜா தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் வீட்டிற்கு வெளியே அவர் வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அக்கம்பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இளையராஜா சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த நாலாட்டின்புதூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.