இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கவிழ்ந்த விபத்தில் அதிகாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள மரவனேரி பகுதியில் தினகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேளாண்மை துறையில் துணை மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தினகரன் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டுள்ளார். அப்போது இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி கவிழ்ந்ததால் படுகாயமடைந்த தினகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.