விதிமுறைகளை மீறி திறந்து வைத்திருந்த இரண்டு கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளையும் திறப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரத்தில் சில வியாபாரிகள் கடையை திறந்து வைத்து விற்பனை செய்வதாக வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் படி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்திய போது அங்கு இருந்த மளிகை மற்றும் இறைச்சி கடைகளை திறந்து வைத்து விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த இரண்டு கடைகளையும் பூட்டி சீல் வைத்தனர்.