Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எங்கெல்லாம் மறைச்சு வைக்குறாங்க… அவ்வளவும் தங்கம் தான்… அதிகாரிகளின் அதிரடி சோதனை…!!

சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வந்த ரூபாய் 4 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள 8 கிலோ 500 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில்  தங்கம் கடத்தப்பட்டு வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அவரின் உத்தரவின்படி, சுங்க இலாகா அதிகாரிகள் துபாய் விமானத்தில் வந்த பயணிகளை கவனமாக கண்காணித்து உள்ளனர். அப்போது அவர்கள் சந்தேகத்தின் பேரில் 17 பேரை நிறுத்தி விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். அதன்பின் அதிகாரிகள் அவர்களின் உடமைகளை சோதனை செய்த போது எதுவும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து அதிகாரிகள் அனைவரையும் தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்ததில் அவர்கள் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. அப்போது அந்த 17 பேரிடம் இருந்து ரூபாய் 4 கோடியே 16 லட்சம் மதிப்புள்ள 8 கிலோ 200 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டனர். இதனை தொடர்ந்து சார்ஜாவில் இருந்து விமானத்தில் வந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் வசித்து வரும் கலந்தர் என்பவரை சோதனை செய்ததில் அவரிடம் ரூபாய் 14 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கம் இருப்பதை கண்ட அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து விட்டனர். ஒரே நாளில் 18 பேரிடமிருந்து ரூபாய் 4 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள 8 கிலோ 500 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள் தங்கத்தை கடத்தி வந்த குற்றத்துக்காக 4 பெண்கள் உட்பட அந்த 18 பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Categories

Tech |