டாஸ்மார்க் கடைகளில் அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மார்க் கடைகளில் அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அதாவது மது பிரியர்கள் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களை டாஸ்மாக் கடையில் சமர்ப்பித்தால் மட்டுமே மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் திடீரென அறிவிப்பு வெளியானது.
இதனால் வருவாய்த்துறை அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் படி டாஸ்மார்க் கடைகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். எனவே, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிகாரிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.