பறக்கும் படை அதிகாரிகள் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற 1 லட்சத்து 21 ஆயிரம் மதிப்புள்ள வேட்டி, சேலைகளை பறிமுதல் செய்து விட்டனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள புதுப்பட்டி பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அதில் 1 லட்சத்து 21 ஆயிரம் மதிப்புள்ள காட்டன் வேட்டி, துண்டுகள், சேலைகள், சட்டைகள் போன்றவை இருந்ததை பறக்கும் படை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து காரை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் மதுரை மாவட்டத்தில் வசித்து வரும் பாஸ்கர் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் கேரளாவில் இருக்கும் பத்தினம் திட்டுபகுதியில் இருந்து மதுரைக்கு இந்த துணிகளை எடுத்துச் செல்வதாக கூறி உள்ளார். ஆனால் அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் அதிகாரிகள் சேலை, சட்டை போன்றவற்றை பறிமுதல் செய்து விட்டனர்.