மகளின் திருமணத்திற்காக பட்டு புடவை வாங்க கொண்டு சென்ற பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் பறிமுதல் செய்து விட்டனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சென்னை மாவட்டத்திலுள்ள காக்கலூர் பால்பண்ணை அருகில் இருக்கும் சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயம் அவ்வழியாக வந்த காரை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.
அப்போது அந்த காரில் பயணித்த 3 பெண்களிடம் 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் இருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த மூன்று பெண்களும் சென்னை மாவட்டத்திலுள்ள மாம்பலம் பகுதியில் வசிப்பவர்கள் என்றும், மகளின் திருமணத்திற்காக பட்டுப் புடவை வாங்க அந்த பணத்தை எடுத்துச் செல்வதாகவும் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து அவர்களிடம் உரிய ஆவணம் இல்லாததால் பறக்கும் படை அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.