ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி தாசில்தார், ஆர்.டி,ஓ குறித்து அவதூறு பரப்பும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாசில்தார், ஆர்.டி.ஓ, அலுவலக ஊழியர்கள் ஆகியோர் மணல் கடத்தலுக்கு உதவுவதாக பரமக்குடி நகர் முழுவதிலும் அவதூறு பரப்பும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்துள்ளது. இந்நிலையில் பரமக்குடி கிராம நிர்வாக அதிகாரி கணேஷ் தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் சுவரொட்டியை ஒட்டியது கீழப்பெருங்கரையை சேர்ந்த விசுவநாதன் என்றும், அதனை வடிவமைத்தது எஸ்.எம்.அக்ரகாரம் பகுதியில் வசிக்கும் ராகவேந்திரன்(29) என்பதும் தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ராகவேந்திரன் வைத்திருந்த கடையில் உள்ள லேப்-டாப், செல்போன் போன்ற பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.