Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தெரிந்த உடனே போயிட்டாங்க… விரைந்து செயல்படும் அதிகாரிகள்… பொதுமக்களுக்கு எச்சரிக்கை…!!

உழவர் சந்தையில் காய்கறி வாங்குவதற்காக குவிந்த பொதுமக்களை சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் காய்கறி மற்றும் மளிகை கடைகள் காலை 10 மணி வரை செயல்பட மட்டுமே அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை அடுத்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கபூர்கான் வீதியில் இருக்கும் உழவர் சந்தையில் ஏராளமான விவசாயிகள் தங்களது தோட்டங்களில் விளையும் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

இங்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நின்று காய்கறி வாங்குவதை அறிந்த உடனே நகராட்சி அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். அதன் பின் அங்கிருந்த பொதுமக்களிடம் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு கூறியதோடு, அங்கு போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Categories

Tech |