Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இனிமேல் இப்படி இருப்பீங்களா…. அதிகாரிகளின் திடீர் சோதனை…. உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை…!!

கொரோனா தொற்று பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத 12 கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் இருக்கும் கடைகளில் கொரோனா தொற்று பாதுகாப்பு விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்கின்றனரா என்பதை கண்காணிப்பதற்காக சுகாதார ஆய்வாளர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் பாத்திரக்கடை, ஸ்டுடியோ, கண்ணாடி கடை, மளிகை கடை போன்றவற்றில் உரிமையாளர்களும், வாடிக்கையாளர்களும் முக கவசம் அணியாமல் நின்று கொண்டிருந்ததை அதிகாரிகள் பார்த்துள்ளனர்.

இதனையடுத்து விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 12 கடைகளின் உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். மேலும் இதுபோன்ற பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காமல் செயல்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளர்களை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Categories

Tech |