விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், பிக்பாஸ் சீசன் 5 வரை நடந்து முடிந்துள்ளது. இதில் முதல் சீசனில் ஆரவ்வும், 2-வது சீசனில் ரித்திகாவும், 3-வது சீசனில் முகினும், 4-வது சீசனில் ஆரியும், 5-வது சீசனில் ராஜுவும் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனுக்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த நிலையில் அக்டோபர் 9-ம் தேதி முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி பிரமாண்டமாக ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 6-ல் போட்டியில் பங்கெடுத்துக்கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தகவலை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் நாளை பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பிக்பாஸ் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.