கார்த்தி நடிக்கும் கைதி படத்தின் வெளியீடு குறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் நடிகர் கார்த்திக்கை வைத்து இயக்கும் படம் கைதி. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் நடிகர் கார்த்திக்_க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா இந்த படத்தின் மூலம் முதன் முதலாக தமிழ் படத்தில் நடிக்கின்றார். இதற்க்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் த்ரில்லராக தயாராகியுள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியது கார்த்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
கைதி படத்தின் வெளியீட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தேதியை கைதி படத்தின் படக்குழு வெளியிடாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கைதி படத்தின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அக்டோபர் மாதம் கைதி படம் திரைக்கு வரும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
#Karthi’s #Kaithi from October.#KaithiOctoberRelease @Karthi_Offl @itsNarain @Dir_Lokesh @SamCSmusic @sathyaDP @philoedit @anbariv pic.twitter.com/lXC3dCEq8M
— DreamWarriorPictures (@DreamWarriorpic) August 25, 2019