சட்டமன்ற தொகுதிகள் வாரியாக ஒப்புகை சீட்டு எண்ணப்பட்ட பின்னரே தேர்தலின் அதிகாரபூர்வ முடிவு அறிவிக்கப்படுமென்று வேலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வேலூர் மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. சற்றுமுன் அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகளும் , அதிமுகவின் AC சண்முகம் 4,77,199 வாக்குகளும் , நாம் தமிழர் கட்சியின் தீபலெக்ஷ்மி 26,995 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன் மூலம் கதிர் ஆனந்த் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
திமுகவின் வென்று முழுமையாக , அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் இன்னும் தொகுதியில் சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்கு ஒப்புகைசீட்டு என்னபட்டு வருகிறது.வாக்கு ஒப்புகைசீட்டு எண்ணி முடித்த பிறகே இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். இதையடுத்து திமுக வெற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ளது.