கலெக்டர் அலுவலகத்தில் வைத்து குழந்தை தொழிலார்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல துறை சார்ந்தவர்கள் உறுதிமொழி செய்துகொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்கள் முற்றிலும் இல்லாமல் செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்காக தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம், சைல்ட் ஹெல்ப் லைன் 1098, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, தொழிலாளர் துறை போன்ற பல துறைகள் இணைந்து செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு குறித்து அதிகாரிகள் உறுதிமொழி செய்துகொண்டுள்ளனர்.
இதனையடுத்து இந்நிகழ்ச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இதில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார்க்குமார் தலைமை வகித்துள்ளார். இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி தலைமை வகித்து அனைத்து துறை அரசு அலுவலர்களும் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு குறித்து உறுதிமொழி செய்து கொண்டு பின்னர் கையெழுத்து ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.