இங்கிலாந்து நாட்டின் எஸ்ஸெக்ஸ் பகுதியில், குளிரூட்டப்பட்ட லாரி கண்டெய்னரில் இருந்து கடந்த 23ஆம் தேதி (புதன் கிழமை) சடலமாக 39 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் இங்கிலாந்தையே அதிர வைத்தது. சடலமாக மீட்கப்பட்ட 39 பேரும் சீனாவிலிருந்து வந்தவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அவர்களில் 8 பேர் பெண்கள் ஆவர். அந்த கண்டெய்னருக்குள் உறைநிலைக்கும் 25 டிகிரி குறைவான வெப்பநிலை இருந்திருக்கக் கூடும் என்பதால், அந்தக் குளிரில் உறைந்து 39 பேரும் உயிரிழந்திருப்பார்கள் என்று கருதப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள 25 வயதான அயர்லாந்தை சேர்ந்த லாரி ஓட்டுநரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக லண்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். லண்டனை அடுத்து எஸ்ஸெக்ஸ் பகுதியிலிருந்த ஒரு லாரியின் கன்டெய்னரில் 39 சடலங்கள் இருப்பதை அவசரக்கால ஊர்தி பணியாளர்கள் கண்டறிந்து, காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.