Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“சாத்தான்குளம் பகுதியில் அதிகாரிகள் திடீர் ஆய்வு”… நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை….!!!!!

சாத்தான்குளம் பகுதியில் இருக்கும் கடைகளில் தொழிலாளர் துறையினர் ஆய்வு மேற்கொண்டார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் பகுதியில் இருக்கும் கடை மற்றும் நிறுவனங்களில் தீபாவளி பண்டிகையொட்டி குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திருப்பதாக புகார் வந்தது‌. இதையடுத்து நேற்று முன்தினம் தொழிலாளர் துறை துணை ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையிலான அதிகாரிகள் சாத்தான்குளம் பகுதியில் இருக்கும் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள்.

அப்போது ஜவுளி, பேக்கரி, மளிகை கடைகள், நிறுவனங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சட்ட விரோதமாக குழந்தைகளை வேலைக்கு அமர்த்திய நிறுவனத்தினருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் போலீசார் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Categories

Tech |