தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தை நெல்சன் இயக்க, பூஜா ஹெக்டே ஹீரோயின் ஆக நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு தற்போது விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்க, பிரகாஷ்ராஜ், பிரபு, சாம், சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் நடிகர் விஜய் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் வழக்கத்தை விட வித்தியாசமான விஜய்யை பார்க்க முடியும் எனவும் படக்குழு கூறியுள்ளது.
இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் அடுத்த வருட பொங்கலுக்கு வாரிசு திரைப்படத்தை ரீலிஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் படத்தின் விநியோக உரிமையை 80 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யலாம் என தயாரிப்பாளர் தில் ராஜு நினைத்துள்ளார்.
ஆனால் பீஸ்ட் திரைப்படத்தின் விநியோக உரிமை 60 கோடிக்கு மட்டுமே விற்பனையான நிலையில், தற்போது வாரிசு திரைப்படத்தை 80 கோடிக்கு வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் யோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மாஸ்டர் திரைப்படத்தின் விநியோக உரிமை 80 கோடிக்கு விற்பனையான நிலையில், ஒரு படத்தின் சொதப்பதால் விஜய்யின் படத்தை விநியோகஸ்தர்கள் வாங்குவதற்கு யோசிப்பது சற்று ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஏனெனில் முன்பெல்லாம் விஜய்யின் படம் என்றாலே விநியோகஸ்தர்கள் யோசிக்காமல் வாங்கி விடுவார்களாம்.