உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் புனேவில் என்ற செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, உலக அளவில் ஒமிக்ரான் வகை வைரஸ் தொற்றின் வேகம் அதிக அளவில் இருக்கிறது. இந்த ஒமிக்ரானில் 300-க்கும் மேற்பட்ட துணை வைரஸ்கள் இருக்கிறது. இப்போது எக்ஸ்பிபி என்று நான் நினைக்கிறேன். இதுபோன்ற மறு சீரமைப்பு வைரஸ்களை நாம் முன்கூட்டியே பார்த்துள்ளோம். இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் அதிக அளவில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த வைரஸின் வீரியம் பற்றி தற்போது தெரியவில்லை.
சர்வதேச அளவில் இன்றளவும் கொரோனா பொது சுகாதார அவசரநிலை நடைமுறையில் இருக்கிறது. கொரோனா நோய் தொற்றின் காரணமாக உலக அளவில் ஒவ்வொரு வாரமும் 8000 முதல் 9000 பேர் உயிரிழக்கின்றனர். நாங்கள் தொற்று முடியவில்லை என்று கூறவில்லை. ஆனால் கொரோனா நோய் பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருவதோடு, அனைத்து விதமான பாதுகாப்பு உபகரணங்களும் நம்மிடம் இருக்கிறது. மேலும் இதில் முக்கியமானது என்றால் அது தடுப்பூசியாகும் என்றார்.