Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே!… சிறுவன் கடித்ததில் நாகப்பாம்பு பலி…. வினோத சம்பவம்…. அதிர்ச்சியில் மருத்துவர்கள்….!!!!

சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூரில் இருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் ஜாஸ்பூர் என்ற மலைவாழ் கிராமம் அமைந்துள்ளது. இங்கு 200 வகையான பாம்புகள் காணப்படுவதால் நாகலோகம் என்றும் அழைக்கப்படுகிறது. ‌ இந்த பகுதியில் உள்ள பந்தர்ப்பாத் என்ற கிராமத்தில் தீபக் (8) என்ற சிறுவன் வசித்து வருகிறார். இந்த சிறுவனை கடந்த திங்கள்கிழமை நாகப்பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதனால் வலியால் துடித்த சிறுவன் ஆத்திரத்தில் பாம்பை பிடித்து 2 முறை கடித்துள்ளான். இதில் பாம்பு உயிர் இழந்து விட்டது. இதனால் பயந்து போன சிறுவனின் பெற்றோர் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைப்பு சென்றுள்ளனர்.

அங்கு சிறுவனுக்கு பாம்பு விஷமுறிவு ஊசி போடப்பட்டுள்ளது. அதன்பின் ஒரு நாள் முழுவதும் சிறுவன் மருத்துவரின் கண்காணிப்பில் வைக்கப்பட்ட நிலையில் சிறுவனின் உடம்பில் பாம்பு கடித்ததற்கான அறிகுறி மற்றும் விஷம் எதுவும் இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதோடு சிறுவன் கடித்ததில் பாம்பு உயிர் இழந்த சம்பவத்தை கேள்விப்பட்ட மருத்துவர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கும் ஆளாகியுள்ளனர். மேலும் பாம்பு கடித்து அப்பகுதியில் உயிரிழந்தவர்கள் ஏராளமானோர் இருக்கும் நிலையில், சிறுவன் கடித்து பாம்பு உயிர் இழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைராகி வருகிறது.

Categories

Tech |