Categories
தேசிய செய்திகள்

ஐயோ! போபாலில் மீண்டும் குளோரின் வாயு கசிவு….. மருத்துவமனையில் பலர் அனுமதி…. பெரும் பரபரப்பு…..!!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபாலில் இத்கா ஹில்ஸ் சென்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது குளோரின் வாயு கசிந்துள்ளது. இதனால் பலருக்கு மூச்சு திணறல் மற்றும் கண்களில் எரிச்சல் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து கலெக்டர் அவினாஷ் லாவானியா கூறியதாவது, வாயுகசிவை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வாய் பேசவின் காரணமாக பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டாலும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

குளோரின் சிலிண்டர் வைத்து வேலை பார்ப்பதால் இது போன்ற பிரச்சனைகள் சில சமயங்களில் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. தண்ணீரில் குளோரின் அளவு அதிகமாக இருந்ததால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது பிரச்சனை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்று கூறினார். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு மாநில கல்வித்துறை அமைச்சர் கைலாஷ் சார்ங் நேரில் சென்று பார்வையிட்டதோடு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் நேரில் சந்தித்தார். மேலும் கடந்த 1984-ம் ஆண்டு இதேபோன்று போபாலில் வாயுக்கசிவு ஏற்பட்டது உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |