Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே! “துணிவு” திரைப்படத்தை வாங்க தயங்கும் விநியோகஸ்தர்கள்?…. அதுதான் காரணமாம்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தல அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான 2 திரைப்படங்கள் தோல்வியை தழுவிய நிலையில், தற்போது எச் வினோத் இயக்கத்தில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க, மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கன், ஜி.எம் சுந்தர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பிரமோஷன் நிகழ்ச்சியில் அஜித் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நடிகர் அஜித்தின் மேனேஜர் ஒரு நல்ல படத்திற்கு விளம்பரமே தேவையில்லை என்று பதிவிட்டு பிரமோஷன் நிகழ்ச்சியில் அஜித் கலந்து கொள்ள மாட்டார் என்பதை மறைமுகமாக தெரிவித்துவிட்டார். இந்நிலையில் அஜித்தின் துணிவு திரைப்படத்தை வெளிநாடுகளில் விநியோகஸ்தர்கள் வாங்க மறுப்பதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கடைசியாக வெளிவந்த 2 படங்களும் தோல்வி அடைந்ததால் துணிவு திரைப்படத்தை வாங்குவதற்கு யோசிக்கிறார்களாம்.

ஆனால் பொங்கல் என்று ரிலீஸ் ஆகும் வாரிசு திரைப்பட த்தின் விநியோக உரிமை நல்ல வியாபாரமானதாக கூறப்படுகிறது. வசூல் சக்கரவர்த்தியாக திகழும் விஜயின் வாரிசு திரைப்படத்தின் விநியோக உரிமையில், பாதி விலைக்கு தான் துணிவு திரைப்படம் வியாபாரம் ஆனதாக கூறப்படுகிறது. மேலும் துணிவு திரைப்படத்தை 18 கோடிக்கு விநியோகஸ்தர்கள் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

 

Categories

Tech |